388நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சிந்தையும் சொல்லும் செயல்யாவும்
       சீலமும் சத்திய இயல்பாகும்
விந்தையின் விந்தை காந்தியரின்
       விடுதலை நாட்டிய சாந்த வழி!       (அன்)2

புண்ணியத்திருநாள் இதில்கூடி
       புதினன் காந்தியின் துதிபாடின்
எண்ணிய காரியம் செயமாகும்
       எமனைக் காணிலும் பயம்ஏது?
மண்ணிடை மதவெறி மடிந்துவிடும்
       மாந்தருள் சமரசம் படிந்துவிடும்
கண்ணியம் மிகுந்திட வாழ்ந்திடுவோம்
       கல்வியும் கலைகளும் சூழ்ந்திடவே.       (அன்)3

வேறு

கொல்லுகின்றது இல்லையென்ற நல்லோர்கள்பேர்
       குவலயத்தில் வாழும்என்று சங்கூதுவோம்!
வெல்லுகின்ற போதும்ஆசை விட்டார்களே
       வீரர் தீரர் சூரர் என்று சங்கூதுவோம்!4

சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்
       சாத்திரங்கள் முடிவுஇதுஎன்று சங்கூதுவோம்
காந்திகாந்தியென்று நம்நாட்டிலே
       கால்நடக்கும் வேதம்என்று சங்கூதுவோம்.5

வேறு

நேய மற்ற மதவெ றிக்கு
       நிலைய மான தேசமாம்
பேயும் கூட நடுநடுங்கிப்
       பேதலித்துக் கூசுமாம்
நாய்ந ரிக்கும் அச்ச மூட்டும்
       நவக ளிக்கும் காந்திதான்
போய்ந டத்தும் யாத்தி ரைக்குள்
       புனித அன்பு சேர்ந்ததாம்.       6