புலவர் சிவ. கன்னியப்பன் 389

தெய்வம்என்று உலகம் நித்தம்
தேடு கின்ற ஒன்றுதான்
வைய கத்தில் ‘அன்பு‘ என்ற
வார்த்தை யாக நின்றதே!
ஐயன் எங்கள் காந்தி வாழ்க்கை
அற்பு தத்தை நாடினால்
மெய்யு ணர்ந்தே அன்பு சொல்லும்
மேன்மை யாவும்கூடுவோம். 7

குறிப்புரை:- சனித்த - பிறந்த; தாரணி - உலகம்.

244. எவர் சாதித்தார்?

கருணையின் பெருமையைப் போதித்தார்
       காந்தியைப் போல்எவர் சாதித்தார்?
மரணமும் அவரிடம் அன்புபெறும்
       மற்றது எதுதான் துன்பமுறும்?       1

சத்திய நெறிதரும் சாந்திரமாம்
       சாத்விக வாழ்க்கையின் சூத்திரமாம்
உத்தமன்காந்தியை மறந்துவிடின்
       உண்மைச் சுதந்தரம் மறைந்துவிடும்.       2

புலையும் கொலையும் புரியாமல்
       புண்ணிய எண்ணம் புரியாமல்
உலகம் இதுவரை கண்டறியா
       உயர்வழி விடுதலை கொண்டுவந்தான்.       3

அணுகுண் டாலும் துன்பமுறா
       ஆன்ம பலத்துடன் அன்புதரும்
இணைகண்டு அறியாச் சக்திதனை
       எம்மிடைப் புகுத்திய சிந்தன்இவன்.       4

இந்திய நாட்டின் மெய்யறிவு
       இதுவெனக் காட்டிடும் ஐயன் இவன்
நிந்தையும் புகழ்ச்சியும் கலைக்காத
       நிம்மதிக் கேஅவன் இலக்காவான்.       5