புலவர் சிவ. கன்னியப்பன் 401

வான்முறைமழைபெய் யாது
       மாநிலம் வளமை குன்றும்
கோன்முறை கோணும் மற்றும்
       குடிவளம் குறைந்து வாடும்
சாண்வயி(று) அதற்குக் கூடச்
       சரிவரக் கிடைக்காது ஊணும்
தான்எனும் அகந்தை நீத்த
       தவசிகள் குறைந்த நாட்டில்.       2

அன்னஅத் துறவு பூண்டோர்
       அரிதுஎனப் போன தாலோ
சொன்னவர் துறவி என்றோர்
       தூய்மையில் குறைந்த தாலோ
முன்னைய வளங்கள் குன்றி
       முதுமறைப் பெருமை விட்டுக்
குன்றிய வாழ்க்கை வந்து
       குறைந்ததுஇப் பரத நாடு.       3

அக்குறைநீங்க வென்றே
       ஆண்டவன் அனுப்ப வந்தோன்
இக்கணம் இந்த நாட்டின்
       இருள்மிகும் அடிமை நீங்க
முக்குணம் அவற்றுள் போற்றும்
       முதற்குணம் வழியே காட்டும்
சத்குரு வான காந்தி
       சத்திய சீலன் தானே.       4

தாங்கண்டஇன்பம் இந்தத்
       தரணியோர் பெறுமாறு எண்ணி
ஆங்குஎன்றும் ஈங்குஎன்று ஓடி
       அறப்பறை அடிக்கும் காந்தி
தீங்குஎன உலகம் சொல்லும்
       செய்கையோர் சிறிதும் இல்லார்
நாங்கொண்ட பெருமை எங்கும்
       நல்லவர் யாருங் கொள்வார்.       5