402நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மனிதர்கள் கடவுள் ஆகார்
       கடவுளர் மனிதர் ஆவார்
புனிதமும் பொறுமை யாவும்
       பொய்யிலா வாழ்வும் பற்றிக்
கனதையும் கருணை பொங்கும்
       காந்திபோல் வாரை விட்டு
இனியொரு கடவுள் என்பார்
       எங்குளார்? எங்கு ளாரே?       6

கடவுளேபொய்யென் றாலும்
       கண்டவர் இலையென் றாலும்
உடனுல குயிர்ஒன் றிற்கும்
       ஒருசிறு தீங்கும் எண்ணார்.
கடனறி சாந்தக் குன்றாம்
       காந்திபோல் வாரை அன்றி
உடலுயிர் உள்ளார் தம்மில்
       உவப்பது யாரை? யாரை?       7

நம்பின பேருக் கேனும்
       நம்புதல் அற்றோர்க் கேனும்
அம்புவி ஏழைக் காக
       அருந்துயர் அனைத்தும் தாங்கி
வெம்பிய செய்தா ருக்கும்
       வெருவுள எண்ணான் சொல்லான்
இம்பரின் காந்தி வாழ்வை
       இலையென மறுக்கப் போமோ?       8

ஈரமும்இரக்கம் மட்டும்
       இருப்பவர் யாரும் எங்கும்
ஓரமும் பொய்யும் நீக்கி
       உயர்குணம் யாவும் காத்து
யாரொரு சிறியர்க் கேனும்
       யாதொரு தீங்கும் ஒப்பான்
சீரியன் காந்தி வாழ்வைச்
       சிறப்பியா(து) இருப்பது எங்கன்?       9