வித்தையின்வித்தை போல விந்தையின் விந்தை காட்டிச் சிதைவுற வெறிகள் மிஞ்சி சீர்குலைந்(து) இருண்ட நாட்டில் சிந்தனை சோதி காந்தி தவத்தினால் தெரியக் கண்டோம். 1கல்லையும்கனியச் செய்து நெருப்பையும் தணித்துப் பொல்லாக் கயவர்தம் மனத்தைக் கூட நயமுறச் செய்து காட்டும் எல்லையில் லாத நன்மை தவத்தினால் இயலும் என்றே ஏட்டினில் படித்த போதும் ஏளனம் செய்தோம் அன்றோ? சொல்லரும் ஞான வாழ்வின் சுடர்எனும் காந்தி எம்மான் சூறையும் கொலையு மாக மதவெறி சூழக் கண்டு தில்லியில் தவமேற் கொண்டு திருத்திய திறத்தைக் கண்டால் தெய்வமே நம்முன் வந்து தெரிசனம் கொடுத்தது அன்றோ! 2 செந்தமிழ்அறிவில் எங்கும் செறிந்துள போத மாகிச் சிறந்தநம் கலைகள் எல்லாம் தினந்தினம் தெரியக் காட்டும் இந்தியர் போற்றி வந்த இப்பெரும் ஞான வாழ்வை இழந்தனம் அழிவே செய்யும் எந்திர மோகம் மிஞ்சி |