நொந்துநொந்துஅறிஞர் வாடும் உலகுடை நோய்கள் தீர நோன்பிருந்து அறங்கள் ஊட்டும் காந்தியின் நோக்கம் ஒன்றே வெந்துயர் போக்கும் சாதி வெறிகளை விலக்கச் செய்யும் வேறெது நம்மைச் செய்த விமலனைக் காட்டும் மார்க்கம்? 3 வாய்மையும்அன்பும் சேர்ந்த வடிவமே கடவுள் என்று வாய்ப்பறை சாற்று கின்றோம் வாதித்து எழுது கின்றோம் தீமையே செய்த பேர்க்கும் நன்மையே செய்வோம் என்று தினம்தினம் மதத்தின் பேரால் செபமணி உருட்டு கின்றோம் நாம்ஒரு சகிப்புக் காட்ட நேர்ந்திடும் நாளில் மட்டும் நல்லதைத் தீயது என்போம் தீயதை நல்லது என்போம் வாய்மையின் வைப்பாம் காந்தி வள்ளலார் வழியே போற்றி வையக மாந்தர் எல்லாம் நலமுற வாழ வேண்டும். 4 தரணியோர்பாபம் எல்லாம் தன்பிழை எனமேற் கொண்டு தனியொரு மனித னாகத் தவமிருந்து உலகம் ஏங்க மரணம்என் பதுவும் கூட மருண்டு அயல் புரண்டு போக |