புலவர் சிவ. கன்னியப்பன் 407

       மாநிலத்துஅறிஞர் எல்லாம்
              வியந்துடன் மகிழ்ந்து வாழ்ந்த
புரணியும் பொய்கள் கூட்டம்
              புகலிடம் தேடி ஓடப்
       புண்ணிய எண்ணம் நம்மைப்
              பிரிந்தவை புகுந்து கொள்ளக்
கருணையின் பெருமை தன்னைக்
              கைக்கனி என்னக் காட்டு்ம்
       காந்தியின் பெருமை தன்னால்
              கடவுளின் பெருமை கண்டோம்!       5

252. தவமுனிகாந்தியவர்

இந்திய நாடு சுதந்தரம்எய்தநல்
தந்திரம் தந்தவர்யார்? - சிறு
கந்தை ‘பக்கீர்‘என்று தந்துஒரு வன்சொன்ன
காந்தி என்னும் பெரியார்.1

அஞ்சிக்கிடந்தநம் நெஞ்சத்து துணிந்திட
       ஆண்மை எழுப்பினது ஆர்? - ஒரு
வஞ்சம் இலாதவர் வாய்மையின் தூய்மையின்
       வாழ்க்கையர் காந்தியவர்.       2

ஆயுதம்இன்றியும் யாரும் வணங்கிடும்
       அன்பைப் பெருக்கினது ஆர்? - சற்றும்
சாயுதல் செய்திடாச் சத்திய மூர்த்திநம்
       தவமுனி காந்தியவர்.       3

நாட்டினுக்காஉயிர் கேட்பினும் தந்திட
       நான்என்று முன்வருவோர் - பலர்
போட்டியிட் டேவர வீரம் புகுத்தினர்
       புண்ணியர் காந்தியவர்.       4