410நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தொல்லறத்தின்புதுப்பதிப்பே!
       தோல்வியிலாச் சால்புடையாய்!
சொல்லுரைக்கப் போதாத
       சுசிகரமே! தொழுகின்றோம்.       4

சாதிமதபேதமிலாச்
       சமதர்ம சந்நிதியே!
நீதிநெறி பிசகாமல்
       நிறுத்(து) அளக்கும் துலாக்கோலே!
வாதுபுரி வம்புகளின்
       வாயடக்கும் வல்லதையே!
ஏதுபுகழ் சொல்லியுனை
       அஞ்சலிப்போம் எம்மானே!       5

வலிமைதரும்சூரியனே!
       வழிகாட்டும் தாரகையே!
குலவவரும் சந்திரனே!
       குளிர்ச்சிதரும் பொன்காற்றே!
புலமைதரும் பொன்மொழியே!
       புதுமைதரும் நன்மருந்தே!
தலமறிந்த தனித்தலைவ!
       தாள்பணிந்தோம்; அஞ்சலித்தோம்!       6

மதிகலங்காமந்திரியே!
       மாசுபடாத் தந்திரியே!
சுதிகலங்கா யாழிசையே!
       சுவைகுறையாச் சொல்லடுக்கே!
நிதிமயக்கா மனநிறைவே!
       நிலைகலங்கா நிம்மதியே!
கதிகலங்காச் சாரதியே!
       அஞ்சலித்தோம் காத்தருள்வாய்.       7

தேடரியசெல்வமே!
       தெவிட்டாத தெள்ளமுதே!
ஏடறியா ஞானமே!
       எழுத்தறியா வித்தகமே!