புலவர் சிவ. கன்னியப்பன் 411

பாடறியாஉழைப்பே!
பயன்கருதாத் திருப்பணியே!
ஈடறியா உத்தமனே!
என்சொல்லி அஞ்சலிப்போம்!8

மண்கண்டமாதவமே!
மறைகண்ட சாதகமே!
கண்கண்ட தெய்வமே!
கலைகண்ட நல்லுணர்வே!
பண்கொண்ட இன்சொல்லே!
பணிகொள்ளும் நன்னயமே!
எண்கொள்ளா மேதையே!
என்சொல்லி அஞ்சலிப்போம்!9

கல்விதரும்நல்லறிவே!
கவிதைதரும் கற்பனையே!
செல்வம்எனும் பொருள்எல்லாம்
சேர்ந்திருக்கும்பொக்கிஷமே!
நல்வினைக்கு நாயகமே!
நடுநிலைக்குத் தாயகமே!
சொல்வதற்கு வேறறியோம்!
காந்தியரே! தொழுகின்றோம்!10

பகைமைபுகாஅரண்மனையே!
படைதொடுக்கா ராணுவமே!
புகையறியாச் சுடர்விளக்கே!
புண்படுத்தாத தவக்கனலே!
வகையறியா மானிடர்க்கு
வரமளிக்கும் நல்வாழ்வே!
தொகையறியாப் பொற்குவையே!
தொழுகின்றோம்துணைபுரிவாய்! 11

கொலைமறுத்தபோர்வீரா!
குடிஒழித்த பேராளா!
நிலைஇழிந்த அரிசனங்கள்
நிமிர்ந்துலவும்முதுகெலும்பே!