416நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நீபி றந்த போதுதேசம்
நிலைகுலைந்து நின்றது
நிந்தை மிக்கஅடிமை வாழ்வில்
நொந்துநொந்து வாடினோம்!
தாய்சி றந்த அன்பி னோடு
துன்பமுற்றும் தாங்கினாய்
தனியிருந்து தவம்இயற்றித்
தைரியத்தை ஊட்டினாய்!
வாய்மை அன்பு வெல்லு கின்ற
வழிநடந்து காட்டினாய்!
வையம் என்றும் கண்டிலாத
வலிமைஎம்முன் கூட்டினாய்!
போய்ம றைந்த ஞான வாழ்வு
புதுமைகொள்ளச் செய்தனை!
புண்ணி யத்தில்முன்னி லாத
கண்ணியத்தைப் பெய்தனை!2

தண்டுமிண்டு தலையெ டுத்துத்
தாறுமாறு மிஞ்சவும்,
தரும நீதி தெய்வபக்தி
தலைவணங்கிக் கெஞ்சவும்,
மண்ட லத்தில் எந்த நாடும்
அமைதியின்றி மருளவும்,
மக்கள் யாரும் யுத்தம்என்று
நடுநடுங்கி வெருளவும்,
கண்டு நொந்து அறிஞர் யாரும்
கவலைகொண்டு ஏங்கினார்
காந்தி தேவ! நீநடந்த
கருணைமார்க்கம் ஓங்கவே
தொண்டு செய்துஇவ் வுலகில் உள்ள
துயரம்போக்க எண்ணினோம்
துணையி ருக்க வேண்டும்என்றே
அஞ்சலித்து நிற்கிறோம்!3