257. காந்தியேவாழ்க! வாழ்க! ஏட்டளவு இருந்த வேதம் இதுவெனஎடுத்துக் காட்டி எழுத்தளவு இருந்தகீதம் செய்கையில்ஏந்தி நின்று வீட்டளவு இருந்த காதல் விருந்தொடுவிரியச் செய்து விருந்தளவு இருந்த நேசம் வியன்பெருநாட்டிற்கு ஆக்கி நாட்டளவு இருந்த அன்பை நானிலம்முழுதும் நீட்டி நானிலத்து எவர்க்கும்அன்பே நாதனைக்காண்பது என்று காட்டினை! சொல்லால் அல்ல ஒழுக்கத்தால்கருணை வாழ்வின் காந்தியே வீசும்சாந்தக் காந்தியேவாழ்க! வாழ்க! 1 பக்தியென்றுஆடு கின்றோம் பஜனையாம்பாடு கின்றோம் பாகவ தம்மென்(று)இங்குப் படிக்கின்றோம்பலநூல் நித்தம் முக்தியென்று ஓது கின்றோம் மேட்சமேபேச்சில் எல்லாம் மோனமும் ஞானம் என்ன மொழிகிறோம்முற்றும் நாளும் சத்தினைப் போக விட்டுச் சக்கையைப்பற்றி வாழ்ந்தோம் சாத்திர சாரந் தன்னைச் சால்புடன்உணர்ந்த தக்கோர் 14 நா.க.பா. பூ.வெ.எ. 489 |