கத்துவதுஎன்றும் மாறா ஒழுக்கத்தின்கருணை வாழ்வின் காந்தியே வீசும்சாந்தக் காந்தியேவாழ்க! வாழ்க! 2 நெற்றியில்நீறு நாமம் நிறைந்திடப்பூசி யென்ன? நியமும் நிஷ்டை யென்று நீண்டதால் நேர்வது என்ன? பற்றிய ஜெபம் செய்மாலைப் பகல்இரவு இருந்தும் என்ன? பார்த்தவர் மருளும் யோக ஆசனம் பழகி யென்ன? சுற்றிய எவரும் நம்மால் துன்புறாத் தூய வாழ்வும் தோன்றிய ஜீவர் எல்லாம் துணையெனக் கருதும் அன்பும் கற்றனை வாழ்வில் என்றும் காட்டினை கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க! 3 திடமொடும்உதித்த ஞானத் திருவுருவு அடைந்த பேரும், தெளிந்தவர் மொழிந்த வற்றைத் திளைந்ததில் தெளிந்தபேரும், அடவியில் இருந்து நாளும் அருந்தவம் புரிந்த பேரும், அடைக்கலம் குருவை நாடி அருள்வழி அறிந்த பேரும், இடம்நிறம் காலம் என்னும் இவைகளில் எதில் வந்தாரும் இவ்வுலகு உதித்த பின்னர் இந்தநா ளளவும் யாரும் |