கடவுளின்இருக்கை கண்டோர் காட்டிய கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க! 4முனிவரர்கோடி கோடி முயற்சியால் சிறந்த நாட்டை மூடவெம் மதியி னாலே முயக்கினோம் அடிமைவாழ்வில் தனிவரும் துயரில், நோயில், தரித்திரத் தாலே வாடித் தளர்ந்திடும் ஏழை மக்கள் துயரத்தைத் தாங்கி நின்றாய் இனிவரும் அணித்தே என்ன எண்ணவும் முடியா மேன்மை இப்பெரும் உன்னைப் பெற்றும் சோம்பினோம் இகழ்ந்து நின்றோம். கனிபெரும் தூய வாழ்வின் கண்ணெனும் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க! 5 என்கடன்பணிகள் செய்து கிடப்பதே என்று முற்றும் ஏழைக்கட் காக வாழ்ந்தோர் எண்ணிலார் இருந்த நாட்டைத் துன்புடை அடிமை வாழ்வின் துயரிடை அழுத்தி விட்டோம் தூயவர் சொல்லை எல்லாம் தூற்றினோம் காற்றில் ஐயோ! வன்பெரும் மிடியால் வாடும் வறியவர்க்(கு) உழைத்தால்அன்றி வாழ்விலை நமக்கே என்று வகுத்தனை! உணர்ந்தோம் ஐயா! |