தெய்வ மேனியோடுகாந்தி திகழ நம்முன் நிற்கிறார்! திருவடிக்கு மாலை சூட்டி தியான பூசை செய்குவோம். வையம் வாழ நல்வ ரங்கள் வாங்கிக் கொள்ள நல்லநாள் வஞ்ச மற்ற நெஞ்சி னோடு அஞ்ச லித்து நின்றுநாம் ஐயன் காந்தி காட்டு கின்ற அன்புவாய்மை போற்றினால் அச்சம் எது? பிச்சை கேட்கும் அவதி ஏது அவனியில்? உய்ய வேறு மார்க்கம் இல்லை காந்தி பக்தி ஒன்றுதான் உலகில் இன்று குமுறு கின்ற கலகம் தீர நன்றுகாண். 2உணவிலாமல் ஏழை மக்கள் உடல் பதைத்து வாடலும் உணர்வி லாத தன்ன லங்கள் பதுக்கி வைத்து மூடலும் குணமி லாத செல்வம் செய்யும் கோடி கோடி துன்பமும் கொடுமை செய்துஇவ் வுலகை ஆளக் கோரு கின்ற வம்புகள் பணமி லாத ஒன்றுக் காகப் பாத கங்கள் புரிவதும் பாவ புண்ணியங்கள் என்ற பயம்இ லாது திரிவதும் அணுபி ளக்கும் குண்டு செய்துஇவ் வகில நாசம் எண்ணலும் அத்த னைக்கும் மாற்று நல்கும் அமரன் காந்தி அண்ணல்தான். 3 |