கோழைகள்போல்குலைவதனால் பயன்ஒன்று இல்லை கொலைவழிகள் கூண்டோடு மறையச் செய்தே ஏழைகளோ கொடுமைகளோ எங்கும் இன்றி இந்தியத்தாய் நாடுஇதனை இலங்கச் செய்வோம் ஊழிதொறும் அவன்நினைவு உதவ வேண்டி உத்தமனைக் குலகுருவாய் பஜனை செய்து வாழிஜெய வாழிஜெய வாழி காந்தி வள்ளலார் திருநாமம் வாழ்க என்போம். 10 குறிப்புரை:-வள்ளலார் - ஈண்டு காந்தி மகானைக்குறிக்கும்; இலங்க - விளங்க. 260. அமரர் காந்திஅண்ணல் வருகை ஞானம் என்றுசொல்லு கின்ற நல்ல சக்தி யாவையும் நானி லத்தில் காந்தி என்று மேனி பெற்று வந்தன. ஈன மிக்க அடிமை வாழ்வின் இடர்மி குந்து நொந்தநம் இந்தி யாவின் விடுத லைக்கு விந்தை மிக்க நன்னெறி தான்ந டந்து வெற்றி தந்து தரணி முற்றும் வாழ்ந்திட தனது சொந்த உடலைக் கூட தத்த மாகத் தந்துபின் வானகத்து இருந்து நம்மை வாழ்த்தும் காந்தி தேவதை வையகத்தில் மீண்டும் நம்மை வந்து பார்க்கும் நாளிது. 1 |