மதவெறிகள் மாச்சரியம்மறைந்தால் அன்றி மாநிலத்தில் உயிர்வாழ மாட்டேன்என்னும் இதயமுறும் சத்தியத்தை இசைத்தார் காந்தி இஷ்டம்போல் உயிர்அதற்கே ஈந்தார்எம்மான். உதயமுற நம்மனத்தில் உணர்ச்சி உண்டேல் உலகமெல்லாம் கலகம்இலா(து) உய்ய வேண்டின், மதவெறியும் இனவெறியும் மறைய வேண்டும் மற்றும்ஒன்று மொழிவெறியும் மாற வேண்டும். 6 உடலமென்றசிறுகூண்டில் மொழிந்தால் என்ன? உள்ளிருந்த ஒருபொருளும் கழிவும் உண்டோ? கடவுள்என்ற ஒருமகிமை இருந்தால் அன்றோ காந்திஎன்ற பெரும்பெயரும் இறந்த தாகும்? திடமுறுவோம் தீரமுடன் நம்மைச் சூழ்ந்த தீமைகளைத் தீரமுடன் தீர்க்கா விட்டால் ‘அடிமை அச்சம்‘ நமைவந்தே அழுத்திக் கொள்ளும் அண்ணலையும் அவமதித்த அதமர் ஆவோம். 7 வள்ளுவரின்வழிவளர்ந்த தமிழா! நீதான் வாய்மையுடன் தாய்மைஅறம் வளர்த்தவள்ளல் தெள்ளுதமிழ் நூல்கள்எல்லாம் தெளிவாய்ச்சொல்லும் தெய்வபெருங் கருணையையே செய்தார்காந்தி. கொள்ளைகளும் கொலைவெறியும் குமுற வாடும் குவலயத்தில் கொடுமைகளைக் குறைக்கநீதான் அள்ளியெங்கும் தமிழ்மொழியின் அறிவை வீசி ஐயன்எங்கள் காந்திவழி அகிம்சைகாப்பாய். 8 மாந்தர்எனஇவ்வுலகில் பிறந்த பேருள் காந்தியைப்போல் மற்றுஒருவர் வந்ததுஇல்லை. சாந்தமுழு சைதன்ய மூர்த்தி என்னும் சர்வேசன் சகலகலா சக்தி தன்னைத் தேர்ந்தவருள் காந்தியினும் தெளிந்தார் இல்லை தெரிந்திருந்தும் மரணம்இதில் தேடிப்பார்த்தால் காந்தியையும் கடந்தஒரு பொருள் உண்டுஎன்று கட்டாயம் நாம் அறியக் கடவோம் அன்றோ? 9 |