பலபலவாம்தீர்மானம் படிக்க வேண்டா; பகட்டாகப் பேசிமட்டும் பயன்வாராதே; உலகினுக்கு வேண்டுவதும் ஒன்றே ஒன்றாகும்; உத்தமனார் காந்திவழி உபதே சந்தான் கலகமின்றி மனிதர்எல்லாம் கலந்து வாழ்க கருணைவழி காட்டஒரு கட்சி வேண்டும்; இலகும் இந்தத் திருப்பணியை உலகுக்கு ஆற்ற இந்தியரே மிகமிகவும் ஏற்ற மாவார். 3 குறிப்புரை:-கடமை - கட்டுப்பாடு; இலகும் - விளங்கும். 266.சொன்னபடி செய்வோம் வானிருந்துஒருதேவன் வலிய வந்து வகைகெட்ட மனிதருக்கு வழியைக் காட்டி, தானிருந்து நமக்காகத் தவங்கள் ஆற்றித் தருக்கான தூஷணைகள் பலவுந் தாங்கி மோனநெறி தவறாத காந்தி யாக முன்னிருந்து காரியங்கள் முயலும்வேளை ஏனிருந்து நாம்பலவும் எண்ண வேண்டும் என்னசொன்னார் காந்தியதைப் பண்ணுவோமே. 1 காந்தியர்க்குக்கைபோல உதவி நின்று கடல்கடந்த ஆப்பிரிக்காக் கண்டந்தொட்டுச் சேர்ந்திருந்து பாடுபட்டு செயமும் பெற்ற சிறப்பெல்லாம் தமிழருக்கே மிகவும்சேரும் நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும் தமிழர்துணை காந்தியவர் நினைப்பார்உண்மை சோர்ந்துவிடக் கூடாது தமிழா! காந்தி சொன்னபடி செய்வதுதான் உன்றன்ஜோலி. 2 267. காந்தீயசேவை சாந்தி சாந்தி சாந்தி யென்று சங்கு கொண்டே ஊதுவோம்; |