சோர்ந்திருக்கும் உலகினுக்குச் சுகமெ டுத்தே ஓதுவோம். மாந்த ருக்குள் கோப தாப வாது சூது மாறவே காந்தி சொன்ன மார்க்கம் இன்றிக் கதிந மக்கு வேறிலை. 1தமிழருக்குக் கருணை எண்ணம் தாயின் பாலில் தந்தது குமிழை யொத்த உயிரை நல்ல கொள்கைக்கு ஈய முந்திடும் அமுதம் ஒத்த காந்தி மார்க்கம் தமிழ கத்தின் செல்வமாம் நமது சேவை அதனை ஏந்தி நாட்டில் எங்கும் சொல்வதாம். 2 268.தமிழா மறக்காதே! காந்தியை மறக்காதே- தெய்வக் கருணையைத் துறக்காதே! சாந்தியை இழக்காதே - என்றும் சத்தியம் அழிக்காதே. (காந்தி)1 வள்ளுவன் திருக்குறளைத் - தந்து வான்புகழ் பெருக்கடைந்த தெள்ளிய அமிழ்தமெனும் - மொழியாம் தெய்வத் தமிழ்மகனே! (காந்தி) 2 திருக்குறள்அறிவுஎல்லாம் - ஒன்றாய்த் திரண்டுள நெறியெனவாம் உருக்குறள் காந்திமகான் - தந்துள ஒப்பரும் சாந்த வழி. (காந்தி) 3 அவ்வழிபற்றி நின்றோம் - உலகின் அற்புத வெற்றி கண்டோம். |