434நாமக்கல் கவிஞர் பாடல்கள்

எவ்வித இடைஞ்சலையும்- அதனால்
எளிதில் கடந்திடலாம்.       (காந்தி)4

போர்வெறிக் கெடுபிடியால் - அஞ்சிப்
பூதலம் நடுநடுங்க
நேர்ந்துள சமயம்இதில் - காந்தியின்
நினைப்பே அமைதிதரும்.       (காந்தி)5

ஒவ்வொரு காரியமும் - பகவான்
உணர்வொடு கோருவதாய்த்
தெய்விக பக்தியுடன் - தேசத்
திருப்பணி சக்திதரும்.       (காந்தி)6

பிரார்த்தனை செய்யாமல் - காந்தி
பெயர்த்தடி வைப்பாரோ?
பார்த்தோம் கண்ணார - அதனால்
பயன்பெற எண்ணோமா?       (காந்தி) 7

பக்தியில்குறைந்துவிட்டோம் - மோகம்
பதவியில் நிறைந்துவிட்டோம்
சத்திய சாந்தத்தில் - மிகவும்
சலிப்பெனச் சோர்ந்துவிட்டோம்.       (காந்தி)8

வேறுள பேச்செல்லாம் - சற்றே
விலக்கிநம் மூச்செல்லாம்
தேறிய காந்திவழி - மீண்டும்
திடமுற ஆய்ந்திடுவோம்.       (காந்தி)9

காந்தியம் நம்உடைமை - அதனைக்
காப்பது நம்கடமை
காந்தியம் வாழ்ந்துஒளிர - தெய்வக்
கருணையைச் சூழ்ந்திடுவோம்.       (காந்தி)10