புலவர் சிவ. கன்னியப்பன் 435

269.படிப்பினை

காந்தியைப்போல் அதிகாலைவிழிக்க வேண்டும்
       கடவுள் என்ற கருணையைநாம் கருத வேண்டும்
காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும்
       களைதீரக் குளிர்நீரில் முழுக வேண்டும்.
காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும்
       கண்டதெலாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப்போல் ஒழுங்காகத் திட்டம் போட்டுக்
       காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.       1

சொன்னசொல்லைகாந்தியைப்போல் காக்க வேண்டும்
       சோம்பலதைக் காந்தியைப்போல் துறக்கவேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தியைப் போல்
       மனிதர்எல்லாம் சமம்என்று மதிக்கவேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
       சிறுமையின்றிக் காந்தியைப்போல்சிறப்புத் தந்தே
‘என்னகுறை? எங்கு வந்தீர்?‘ எனக்கேட்டும்
       இன்முகமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.       2

குற்றம்ஒன்றுநாம்செயினும் காந்தி யைப்போல்
       கூசாமல் மன்னிப்புக் கோர வேண்டும்;
மற்றவர்கள் பெருந்தவறு செய்திட்டாலும்
       மன்னித்துக் காந்தியைப்போல் மறக்கவேண்டும்;
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல்
       ஓரம்இன்றிக் காந்தியைப்போல் உண்மைகாட்டிச்
சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச்
       சரிப்படுத்தும் காந்தியைப்போல்சகிப்பு வேண்டும்.       3

எத்தனைநாள்கடிதங்கள் வந்திட் டாலும்
       காந்தியைப்போல் சகிப்புஇன்றி எல்லோருக்கும்
நித்தம்நித்தம் தவறாத கடமை யாக
       நிச்சயமாய்ப் பதில்எழுதும் நியமம்வேண்டும்