புத்திகெட்டகேள்விசிலர் கேட்டிட் டாலும் பொறுத்துவிடை காந்தியைப்போல்புகலவேண்டும் பத்தியம்போல் பதற்றமுள்ள பாஷை நீக்கிப் பரிவாகப் பணிமொழிகள் பதிக்க வேண்டும். 4 புகழ்ச்சியையும்இகழ்ச்சியையும் சமமாய் எண்ணிக் காந்தியைப்போல் பொதுநோக்கும்பொறுமை வேண்டும் மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமா றாமல் காந்தியைப்போல் மனதுஅடக்கப் பயிலவேண்டும் வெருட்சிதனை வேரோடு களைந்து நீக்கக் காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும் நிகட்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப்பார்த்து நேர்மையுடன் குற்றம் எல்லாம் நீக்கவேண்டும். 5 வருகின்றயாவருக்கும் எளிய னாகக் காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம்வேண்டும் தருகின்ற சந்தேகம் எதுவா னாலும் காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம்செய்து திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து, திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும். புரிகின்ற புத்திமதி எதுசொன் னாலும் புண்ணின்றிக் காந்தியைப்போல்புகட்ட வேண்டும். 6 எத்தொழிலைச்செய்தாலும் காந்தியைப் போல் எசமானர் கடவுளென எண்ண வேண்டும் சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால் சரியாக மற்றது எல்லாம் சாயும் என்ற பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக்கொண்டால் பாதகமோ சாதகமோ பலன்கள் எல்லாம் நித்தியனாம் சர்வேசன் கடமை என்ற நிசபக்தி காந்தியைப்போல் நினைக்கவேண்டும். 7 உழைப்பின்றிச்சுகம் விரும்பல் ஊனம் என்று காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும் |