புலவர் சிவ. கன்னியப்பன் 437

அழைப்பின்றித் துன்பமுற்றோர்அருகில் ஓடி
       காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்புவேண்டும்
பிழைப்பு இன்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள்
       பின்பற்றிக் கைத்தொழிலின்பெருமை கொண்டு
களைப்பின்றிப் பசிதீரும் வழியைக் காட்டக்
       காந்தியைப்போல் கைராட்டை நூற்கவேண்டும்.       8

மனிதர்எல்லாம்ஒருகடவுள் மக்கள் என்று
       காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும்
புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச்சொல்லிப்
       போர்மூட்டும் மதவெறியைப் போக்கவென்றே
அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல்
       அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும்
தனதுமதம் தனதுஇனம் மேல்என்(று) எண்ணும்
       தருக்குகளைக் காந்தியைப் போல்தணிக்கவேண்டும்.       9

சிறுதுளியும்வீண்போகாச் செலவு செய்யும்
       காந்தியைப்போல் சிக்கனங்கள்பழகவேண்டும்
பிறிதுஒருவர் பாடுபட்டுத் தான்சு கிக்கும்
       பேதைமையைக் காந்தியைப்போல்பிரிக்க வேண்டும்
நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
       நீக்கிவிட காந்தியைப்போல் நேர்மைவேண்டும்
குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்துக்
       குணநலத்தின் காந்தியைப்போல்கொள்கை வேண்டும்.       10

வீரமென்றும்வெற்றியென்றும் கோப மூட்டி
       வெறிகொடுக்கும் பேச்சையெல்லாம்விலக்கி எங்கும்
ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
       இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம்வேண்டும்
காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட் டாலும்
       காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத்தள்ளிப்
பாரமற்ற மனநிலையைப் பாதுகாத்துப்
       பகைமையெண்ணாக் காந்திமுறை பயில வேண்டும்.       11