புலவர் சிவ. கன்னியப்பன் 443

மாந்தருக்குள் சமுக வாழ்வு
       மாறும் இந்தப் பொழுதிலே
சோர்ந்தி டாமல் நமது நாட்டை
       துயில்எ ழுப்பும் ஓசையாம்.       1

இடிஇடித்து மின்னல் மின்னி
       இருள் கவிந்தே எங்கணும்
கிடுகிடுத்து உலகம் எங்கும்
       கிலிபி டித்த வேளையில்
குடுகு டுத்த கிழவர் காந்தி
       குமரர் நாணக் கூவினார்
துடிது டித்து உண்மை போற்றும்
       தொண்டர் யாரும் கூடுவோம்.       2

வீடுபற்றி வேகும் போது
       வீணை மீட்டும் வீணர்போல்
நாடு முற்றும் புதிய வாழ்வை
       நாடு கின்ற நாளிலே
பாடு மிக்க சேவை விட்டுப்
       பதவி மோகம் பற்றினால்
கேடு என்ற எச்ச ரிக்கை
       கிழவர் காந்தி கூக்குரல்.       3

கடல்கலங்கப் புயல்அ டித்துத்
       தத்த ளிக்கும் கப்பலின்
திடமி குந்த தெளிவு கொண்ட
       திசைய றிந்த மாலுமி
இடம றிந்து காலங் கற்ற
       இந்த நாட்டின் மந்திரி
கடன றிந்த காந்தி போதம்
       கவலை போக்கும் மந்திரம்.       4

கர்ம வீரன் காந்தி என்னும்
       காள மேகக் கர்ஜனை