தர்ம மான மழைபொழிந்து தரணி முற்றும் குளிரவே வர்ம மான வார்த்தை யாவும் வாது சூது செய்திடும் மர்ம மான எதையும் விட்ட ராச மார்க்க மதிதரும். 5 வீரம்என்றும் சூரம் என்றும் வெறிகொ டுக்கும் பேச்சினால் காரம் உள்ள வார்த்தை யாவும் யாரை என்ன செய்திடும்? தீரர் ஞான காந்தி சங்கம் திசைமு ழங்கக் கேட்குது சேர வாரும் மனித வாழ்க்கை சீர்தி ருத்த வேண்டுவோர். 6 குறிப்புரை:-மாலுமி - கப்பலை இயக்குபவன்; பாடு - துன்பம்; புயல் - காற்று;நாடுமுற்றும் - நாடுதழீஇய;கவலை - மனத்துயர்.
|