புலவர் சிவ. கன்னியப்பன் 455

பள்ளமும் மேடும் சமனாகும்!
       பாபங் களுக்கும் எமனாகும்!
கள்ளமும் சூழ்ச்சியும் கரைந்தோடும்
       கருணையின் வெள்ளம் நிறைந்தோடும்.       4

கலைகளும் கவிதையும் புதுமைபெறும்!
       கஷ்டமும் சுகங்களும் பொதுமையுறும்!
நிலமிசை நீதியை நிலைநாட்டும்!
       நெறிமுறை புதுப்புல் தலைநீட்டும்.       5

சரித்திர வெள்ளித் திரைமேலே
       சமுத்திர அலைகள் திரள்போலே
விரித்திடும் புதுப்புதுக் காட்சிகளை
       விளக்கிடும் இயற்கையின் ஆட்சியினை.       6

மலைகளும் மரங்களும் சாய்ந்துவிடும்!
       மனிதருள் பிணக்குகள் ஓய்ந்துவிடும்!
தலைவிரித்(து) ஆடிய அகந்தையெலாம்
       தரையொடு மண்ணில் புகுந்து ஒழியும்.       7

சக்திக் கடவுளின் பெருமூச்சே
       சண்டமாருதம் எனலாச்சே
பக்திக்குரியவர் அஞ்சாரே!
       பாதகர் யாரும் மிஞ்சாரே.       8

280. புத்தாண்டு வரம்

(வேலூர்ச் சிறையில் கவிஞர் ஆங்கில
வருடப் பிறப்பன்று பாடியது)

எண்ணிலா ஆண்டு கண்டுஇங்கு
       இருந்தவள் எனினும் இன்னும்
கண்ணினுக்(கு) இனிய தூய
       கன்னியாய் என்றும் நின்று
தண்ணொளி அழகு காட்டும்
       தமிழகத் தாயே! இன்றுன்