456நாமக்கல் கவிஞர் பாடல்கள்

புண்ணியம் நிறைந்த வாழ்வில்
       புதியதோர் ஆண்டு பூண்டாய்.       1

காங்கிரஸ் காரர் யாரும்
       காந்தியெம் அடிகள் ஆதி
ஆங்கிலர் சிறையுற் றுள்ள
       அருந்தவம் கிடக்கும் இந்நாள்
ஆங்கி ரசமென்று ஓதும்
       ஆண்டினைப் பூண்டு வந்தாய்
பாங்கியே! இந்தக் கோலம்
       பார்த்திலம் முன்னம் நாங்கள்!       2

புதியஇவ் வாண்டில் மிக்க
       புதியதோர் அழகு பூண்டாய்!
நிதியமும் இழந்தது எல்லாம்
       நீயடைந் திட்டாய் போல
விதியினைக் கடந்த ஞான
       வித்தகர் தெளிவு பூண்டாய்
புதியது புதியது அம்மா
       புகுந்தஉன் கோலம் இன்று!       3

வாடினை இருந்த மேனி
       வளமிகும் வடிவு காட்டிக்
கூடின புருவம் இன்று
       குளிர்ந்தன களிக்கக் கண்டோம்!
பாடின இனிய கீதம்
       பற்பல ஆண்டுக்(கு) இப்பால்
ஆடினை அடையா ளத்தை
       அறிந்திலம் முதலில் நாங்கள்.       4

முன்னம்நீ எம்பாற் கொண்ட
       முணுமுணுப்பு இன்று காணோம்!
அன்னைநீ முன்னம் காட்டும்
       அருவருப்பு இன்று காணோம்!