புலவர் சிவ. கன்னியப்பன் 457

பின்னும்நீ எம்பாற் பேசும்
       பிணக்கினைக் காணோம் இந்நாள்
என்னவோ புதுமை யாக
       இருக்கிறது எங்கள் தாயே!       5

வீட்டினில் இருந்த போது
       வெகுண்டுஎமை மருண்டு பார்ப்பாய்!
கூட்டினிற் கிடக்கும் இந்நாள்
       குளிர்ந்தனை சிரித்து வந்தாய்!
நீட்டினை முடங்கி நொந்த
       நின்னுடை அங்கம் பூத்துக்
காட்டினை என்றுங் காணாக்
       கட்டழ குடனே வந்தாய்.       6

எண்ணெயும் மறந்த உன்றன்
       இருண்டிடை சுருண்ட கூந்தல்
வண்ணமாய் வாரி மிக்க
       வாசனை மலருஞ் சூடித்
திண்ணமாய்ச் சத்திக் கான
       திலகமும் தீட்டி யுன்றன்
கண்ணியல் மையினோடு
       கலவையின் மையுந் தீட்டி.       7

பற்பல ஆண்டின் முன்னே
       வெறுத்தஉன் பணிகள் எல்லாம்
அற்புத உன்றன் மேனி
       அழகுற அணிந்தாய் இன்று;
கற்பனை கடந்த வேலை
       கதிர்விரி உடையும் பூண்டாய்;
நிற்பது கண்டோம்; என்ன
       நினைந்துஇவை புனைந்தது அம்மா!       8

புத்தொளி புனைந்தே எம்முன்
       புத்துயிர் அளிக்க வந்தாய்;