இத்தினம் உன்றன் ஆண்டு விழாவினில் எங்கள் தாயே! பத்தியுன் பாதம் போற்றிப் பணிந்துனை வேண்டுகின்றோம் உத்தமீ எங்கட்கு இந்நாள் ஒருவரம் தருதல் வேண்டும். 9அடிமையின் வாழ்வு நீ்ங்க ஆண்மையும் அறிவும் வந்து குடிமையின் முறையும் சொந்தக் கோல்நெறி அரசும் கொண்டு படிமிசை எவர்க்கும் அஞ்சிப் பணிந்திடாப் பலமும் பற்றி விடுதலை அடையத் தேசம் வழிவிட வேண்டும் தாயே. 10 சோறிலை என்பார் இன்றித் துணியிலை என்றும் உண்ணும் நீரிலை என்றும் நிற்கும் நிழலிலை என்றும் சுற்றத் தாரிலை என்பா ரோடுந் தாழ்ந்தவர் என்பார் இன்றிப் பாரினில் எவர்க்கும் நாங்கள் பகையிலை என்றும் வாழ்வில். 11 ஏழையென்று எவரும் இன்றி எளியர்என் பாரும் இன்றிக் கோழைஎன்(று) உரைக்க ஆண்மை குறைந்தவர் ஒருவர் இன்றி மேழியும் தொழிலும் தந்த மேதினிப் பொருள்கள் யாவும் வாழிய எவர்க்கும் கிட்டி வருந்துவார் எவரும் இன்றி. 12 |