புலவர் சிவ. கன்னியப்பன் 459

எண்ணெழுத்து இரண்டும் கல்லார்
       இல்லைஇந் நாட்டில் என்னப்
பெண்ணினோ(டு) ஆணும் ஒத்துப்
       பிணக்கிலாத் தம்தம் வாழ்வை
எண்ணிய இறைவன் ஆணைக்(கு)
       இடர்இலா ஒழுங்கில் ஏந்தும்
புண்ணிய வாழ்விற்கு ஆசி
       புரிந்திடல் வேண்டுந் தாயே!       13

என்னுடை நாடுஇந் நாடாம்
       என்றுஇதில் பிறந்த யாரும்
தன்னுடை அறத்தைச் செய்யத்
       தடுப்பவர் யாரும் இன்றி
‘மன்னவன் நானே‘ என்று
       மனங்களித்து இனிது வாழ
இன்னவை வரமே வேண்டி
       இணையடி பணிந்தோம் தாயே!       14

குறிப்புரை:- மேதினிப்பொருள் -உலகப் பொருள்;
பாரினில் - உலகினில்; வெகுண்டு - கோபித்து;புருவம் -
நெற்றிப் புருவம்.

281. தாய் வரம் கொடுத்தல்

தந்தனன் இவ்வரம்
       தந்தனன் இவ்வரம்
              தந்தனன் என்மகனே!
வந்தது வாழ்வு இனி
       வெந்தது தீவினை
              வாழ்ந்தனை உன்செயலால்!       1

நாட்டைஇவ் வடிமையின்
       மீட்டிடு வேன்என்று
              நாட்டினை தவக்கொடியே;