460நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கேட்டு மகிழ்ந்(து) உனைப்
       பார்த்து புகழ்ந்திடக்
              கிட்டினன் இங்கு வந்தேன்.       2

தருமம் உணர்ந்தனை
       கருமம் அறிந்தனை
              தாயென நீநினைந்தாய்;
பெருமை அளித்தனை
       சிறுமை ஒழித்தனை
              பெற்ற மனங்களித்தேன்.       3

அச்சம் அகற்றினை
       ஆண்மை பெருக்கினை
              ஆனந்தம் பொங்குதடா!
இச்சை அதன்படி
       யாவும் உனக்குஇனி
              இல்லறம் தங்குமடா!       4

தீயவை விட்டனை
       தூயவைத் தொட்டனை
              தெளிவடைந் தாய்மகனே!
போயின என்னுடை
       மனக்குறை யாவையும்
              புத்தொளி பூண்டு விட்டேன்!       5

உன்னை உணர்ந்தனை
       என்னை உவந்தனை
              உண்மை அறிந்துவிட்டாய்!
இன்னும் எனக்குஇனி
       என்ன மனக்குறை!
              இன்னல் மறந்துவிட்டேன்!       6

என்னுடை நாடெனச்
       சொன்னஉன் சொற்களில்
              என்மனம் குளிர்ந்த தடா!