புலவர் சிவ. கன்னியப்பன் 461

பின்னிய துயர்விடப்
       பொன்னொளி அணிமணி
              பூண்டு மகிழ்ந்த தடா!       7

சத்தியம் உன்னுடைச்
       சித்தம் உதித்தது
              சஞ்சலம் ஏன்மகனே?
பொய்த்தவர் வஞ்சமும்
       புகுந்தவர் மோசமும்
              போவது காண்மகனே!       8

சாந்தி பிறந்துயர்
       காந்தி விரிக்குது
              சங்கடம் தீர்ந்ததடா!
போந்தது புத்துயிர்
       புகுந்தது தைரியம்
              புதுவரு டத்தோடே.       9

திங்கள்முன் மாரியில்
       பொங்கிடும் பால்இனி
              தேசம் செழிக்குமடா!
மங்களம் மங்களம்
       மங்களம் உனக்கு இனி
              மகனே எழுந்திரடா!       10

குறிப்புரை:- இன்னல் - துன்பம்; பூண்டு - அணிந்து;
சாந்தி - அமைதி; மங்களம் - அழகு; உவந்தனை -
மகிழ்ந்தனை; இச்சை - விருப்பம்.

282. அவள்

(‘அவளும் அவனும்‘ என்னும் நூலினின்று
தொகுக்கப்பெற்றது)

‘மான்‘என அவளைச் சொன்னால்
       மருளுதல் அவளுக்கு இல்லை.