கடவுளை நேரில் கண்டதில்லை; அவரைக் கண்டவர் என்றவர் விண்டதில்லை. அடைவரும் அந்தக் கடவுளும் காவேரி ஆற்றின் பெருமையில் தோற்றதுபார். 2 வெள்ளப் பெருக்கினைப் பார்க்கையிலும், அதன் வேகத்தின் சித்தத்தைக் கேட்கையிலும், உள்ளம் திகைத்தோர் உண்மை அறிவினை ஊட்டுது; தெய்வத்தைக் காட்டுதுபார். 3 ஆலம ரத்தையும் வேர்பறித்தே, அதை ஆட்டி உருட்டி அடித்துக்கொண்டு காலனும் கண்டால் நடுங்க வருகின்ற காட்சியும் யாருடைச் சூழ்ச்சியினால்? 4 காடும் மலையும் கிடுகிடுக்க, அந்தக் காட்டு மிருகங்கள் ஓட்டமிட ஓடும் நதியிலே அத்தனை தண்ணீரை ஊற்றுவ தார்?என்ற மாற்றம் வரும். 5 ஆனை சிறுத்தைகள் அஞ்சிப் பதுங்கிட ஆட்டையும் மாட்டை அடித்துக்கொண்டு சேனை யிலும்கடு வேகத்துடன் வரும் சீக்கிரம் யாருடை ஆக்கினையோ! 6 மேட்டில் அணையென்று போட்ட சுவர்களில் மெள்ளமெள்ள அதன் கல்லரைக்கும் ஓட்டத்து டன்வரும் ஊட்டத்தைக் கண்டுநம் உள்ளத்தில் எண்ணங்கள் துள்ளுதுபார். 7 நேற்று நடந்திட்ட மக்களின் பாதங்கள் நீற்று நெருப்பெழக் கொப்புளித்த ஆற்றிலே இன்றைக்கும் அத்தனை தண்ணீர் அப்படி வந்ததும் எப்படியோ! 8 |