நீரின்றி மக்கள் நிலையுமுண்டோ? அந்த நீரைத் தருவதும் ஆறல்லவோ! ஆறென்ற நீருக்கும் மேகங்கள் ஆதாரம் ஆகாயம் மேகத்துக்கு ஆதரவு. 9 ஆனதி னால்அந்த வானத்தி லேஒரு அற்புத சக்தி இருக்கும் என்றே வானத்தையே தெய்வம் வாழும் இடம்என்று வையகம் சொல்வதும் பொய்யல்லவே. 10 ஆனைகட் டியர சாண்டா லும்பல ஆயிரம் வித்தைகள் கற்றாலும் சேனைகட் டிப்பகை வென்றாலும்அவர் தின்னக் கொடுப்பவள் காவேரி. 11 அன்னம் அளிப்பவள் காவேரி; நல்ல ஆடை கொடுப்பவள் காவேரி; இன்னும் மனிதர்க்கு வேண்டிய இன்பங்கள் யாவையும் காவேரி யேதருவாள். 12 விண்கொண்ட தெய்வத்தை நாமறியோம்,சொல்லும் வேதம் புராணங்கள் பார்த்து அறிவோம். கண்கண்ட தெய்வம் காவேரி, நம்மைக் காத்திடுவாள் கஞ்சி வார்த்திடுவாள். 13 தாய்மொழி தெய்வத் தமிழ்மொழியாம் அதைத் தந்த அகத்திய மாமுனிவன் தூய்மைக் கமண்டல நீர்என்று காவேரிச் சுத்தத்தைச் சொல்லித் துதித்திடுவார். 14 குறிப்புரை;- ஆதாரம் - அடிப்படை, தாங்குதல்;காவேரி - தென்னக ஆற்றிலே பெரியது. ஆடிமாதம் பதினெட்டாம் தேதியை ஆடிப்பெருக்குஎன்பர். அன்று காவேரி ஆற்றங்கரையில் பொங்கலிட்டுக் காவேரியைக்குலதெய்வமாகக் கருதிப் பூசித்து வழிபடுவர். |