486நாமக்கல் கவிஞர் பாடல்கள்

விஞ்ஞா னத்தின் விரிந்த அறிவுடன்
இயற்கையின் விதிகளை முற்றும் இணைத்தும்
சக்தி சாத்திரம் சரியாய்ச் சேர்த்தும்,
அணுவணு வாக அளந்து செய்தும்       60

கொஞ்சம் கூடக் குற்றம்இல் லாமல்,
குறித்த வேளையில் குறிதவ றாமல்,
எண்ணிய படியே எதையும் செய்யப்
படுபட்டுப் பண்ணி முடித்து,
பரிட்சை பலமுறை செய்தும் பார்த்த       65

எத்திரப் பொறிகளில் ஏறிக் கொண்டு,
எதிரியை மிகவும் எளிதிலே கொல்லத்
திறமை வாய்ந்த திட்டத் துடனே
வீரம் கூறிச் சென்றிடும் வீரன்
இடையிலே தன்னுடை யந்திரம் கெட்டுத்       70

தந்திரம் விழுந்து தானும் மடிந்து,
விழுந்த இடத்தையும் வேறே யாரும்
கண்டு பிடிப்பதும் கஷ்டமாய் விடுகிற
நிகழ்ச்சிகள் எத்தனை நித்தமும் பார்த்தோம்!
மந்திரம் எங்கே? தந்திரம் எங்கே?       75

திறமை மிகுந்த திட்டமும் எங்கே?
வருடக் கணக்கில் வருந்தி எண்ணித்
தீர்த்து முடித்துத் திட்டம் செய்யினும்
எண்ணுவது ஒன்றே மனித இட்டமாய்க்
காரியம் முடிக்கக் கர்த்தா அல்லவே.       80