புலவர் சிவ. கன்னியப்பன் 485

பரம்பரை யாகப் பாத்தியம் கூறிச்
சுகித்து வாழும் சூழ்ச்சிகள் எண்ணி,       30

அரசியல் தந்திரம் அனைத்தையும் சேர்த்துத்
திட்டம் போடும் திறமை மிகுந்த
எத்தனை யோபல ஏகாதி பத்தியம்
மண்ணிற் புதைந்து மறைந்து போவதைப்
படித்தும் கேட்டும் பார்த்தும் வருகிறோம்.       35

திட்டம் எங்கே? திறமையும் எங்கே?

* * *

குடும்பச் சொத்துகள் குறையா திருக்கக்
கோயில் சத்திரம் குளங்களுக் காகத்
தருமம் என்று சாசனம் செய்து,
தன்னுடைப் பரம்பரை தன்னிலே பிறக்கும்.       40

அவர்களே என்றும் ஆண்டு வரும்படி,
பத்திர மாகக் பத்திரம் எழுதி
முத்திரை யோடு முடித்து வைத்தும்,
தருமம் என்பதும் தாறுமா றாகிக்
கள்ளிலும் சூதிலும் காம வெறியிலும்       45

கட்சிச் சண்டைகள் கண்ட வழக்கிலும்
அழிவதைக் கண்டே அதிகா ரத்தினை
மற்றுள ஊரார் மாற்றி விடுவதும்,
அல்லது அந்தச் சொத்தினை ஆளவும்
அந்தச் சந்ததி மைந்தனில் லாமல்       50

வேறே யாரோ விவகா ரங்களைத்
தொடுத்துச் சொத்தினைத் தொடர்வதும் உண்டு.
அன்றியும் அதனை அரசாங் கத்தார்
பறிமுதல் செய்வதும் பார்த்தோம் அதனால்
முத்திரை போட்ட பத்திரம் எங்கே?       55

திறம்பட வகுத்த திட்டமும் எங்கே

* * *