484நாமக்கல் கவிஞர் பாடல்கள்

291. திட்டம் எங்கே? திறமையும் எங்கே?

தன்னுடைப் பலமும் தன்னை எதிர்க்கும்
எதிரியின் பலமும் இவ்வளவு என்று
கணக்குப் போட்டுக் கூட்டிக் கழித்துப்
பெருக்கி வகுத்து, வகுத்துப் பெருக்கித்
தேர்ந்து தெளிந்து திட்டம் போட்டுப்       5

பற்பல நாட்டைப் படையெடுத் துப்போய்
அடித்துப் பிடித்தே அங்குள்ள மக்களைச்
சுட்டுக் கொன்று சூறை யாடிய
வெற்றி மாலை கழுத்தில் விழுமுன்
வெட்டுக் கத்தியே கழுத்தில் விழுந்திட,       10

தன்னுடைப் படையே தன்னைக் கொல்ல,
மாண்டு மறைந்த வீரரும் மன்னரும்
போட்ட திட்டம் போனது எங்கே?
அந்நிய நாட்டை அடிமைப் படுத்தி
அங்குள மக்கள் சோற்றுக்(கு) அலைய       15

தம்முடை நாடும் தாமும் தமர்களும்,
தின்று கொழுத்துச் சுகமாய்த் திரிய
அடிமைப் படுத்திய அங்குள மக்களை
ஒன்று சேரவும் ஒட்டா விதமாய்த்
தனித்தனிக் கும்பலைத் தட்டிக் கொடுத்து,       20

கொழுத்த சம்பளக் கூலி கொடுத்து,
நாட்டை விற்று நல்லசோ றுண்ணக்
காட்டிக் கொடுக்கிற கயவரின் துணையால்,
குற்றங் காட்டி அடித்துக் கூறி
அறவழி காட்டும் அந்த ணாளரை.       25

சத்தியம் பேசும் சாது மக்களை,
சீறி அடக்கியும் சிறையில் தள்ளியும்
உலகமும் தாங்களும் உள்ள வரையிலும்