மன்னவர் செல்வமும் மதியா ளாகி ஏழை எளியவர் உறவே இன்பமாய்க் குடிசையில் வசித்துக் கூழையே ருசித்துப் பண்டிதர் வியந்து பணிந்திடும் படித்தாய்ப் பாமர மக்கள் பயன்பெற வென்றே 30 எவருக்கும் புரிவதாம் எளிய நடையில் நீதிகள் பாடிய நிகரிலாச் சிறப்புள தீரக் கிழவியின் திவ்விய சரிதையை அழகிய சிற்சில கற்பனை அமைத்தும் உருவிலாக் கதையை உருப்படி ஆக்கியும் 35 நூதன நாடக நூலாய்ச் செய்தது தமிழன் னைக்குஒரு தனித்திருப் பணியாம். இப்படி நூல்கள் பற்பல இயற்றி மங்களம் பெருகி ‘மதுரைஸ்ரீ பால சண்முகா னந்த சபையார் வாழ்க!‘ 40 293. பிள்ளையார் சுழியும் இஷ்ட தெய்வமும் ‘ஒம்‘எனும்அப் பிரணவத்தின் உண்மை காட்டித் தூய்மை தரும் ‘பிள்ளையார் சுழி‘யைப் போட்டே நாம்எதையும் எழுதுவதே நன்மை சேர்க்கும்; தீமைஎதும் தீண்டாமல் நம்மைக் காக்கும். 1 ஹயவதனன் அவனருளால் துன்பம் நீங்கும்; பயமகற்றும் திருமகளால் இன்பம் ஓங்கும்; மயலகற்றிச் சாந்தநிலை மலரச் செய்யத் தயவருளும் தட்சணா மூர்த்தித் தெய்வம். 2 சிவனருளே ஆசைகளை எரிக்கச் செய்யும்; சிவகாமி தேகபலம் சிறக்கச் செய்யும் பவகுகனே பகையுளதேல் ஒடுக்கி வெல்லும்; நவசக்தி நாமகளும் நமக்கு நல்கும். 3 |