குறிப்புரை:-‘ஓம்‘ என்ற பிரணவம்சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் பீடமாகஇருப்பது; மற்றைய தேவர்கட்கு எல்லாம் பிறப்பிடமாகஇருப்பது; எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் மூலமாக இருப்பது, காசியில் இறப்பவர்கட்குஇறைவன் உபதேசிக்கும் தாரகப் பிரமமாய் விளங்குவது. 294. சீட்டுக் கவி சென்னிமலை முருகனிடம் தீராத பக்தனாய் செகமெச்ச வாழ்ந்த செல்வன்; திருராச லிங்கனார் தருராச குருநாத சீலமிகு நண்ப ருக்குக் கன்னிமுதல் வேங்கடத் தமிழ்நாடு முழுவதும் காந்தீய சேவை செய்யக் களைதீரும் சத்தியச் சாந்தநெறி பாடிடும் கவிராம லிங்கன் நிருபம் அன்னையினும் அன்புடைய அவதார மூர்த்தியாம் அருள்சீல காந்தி யாரின் ஆணையொடு நீயறப் போர்தரப் போவதை அறிந்துளம் பூரித்தேன் நான் நின்னைநம் ஜில்லாவில் பெற்றதொரு பாக்கியம் நிகரிலா தாகும் உண்மை ஓயாத செல்வமுடன் மாயாத புகழுடன் ஓங்கிநீ வாழ்க! வாழ்க! 295. பொன்விழா வாழ்த்து (கீழ்வரும் பாடல் சென்னை செங்கல்வராயன்அறநிலையங்களின் பொன் விழாவினைக் குறித்துப் பாடியது) இத்தரையில் மானிடராய்ப் பிறந்துவாழ்ந்தே இன்பசுக போகங்கள் எல்லாம் கண்ட எத்தனையோ கோடானு கோடிச் செல்வர் இருந்தஇடம் தெரியாமல் மறைந்து போனார். |