பத்தியுடன் மாணவர்க்குப் படிப்பும்தந்து பலவிதமாம் தொழில்கல்வி பயிலச்செய்யச் சித்தமுடன் செல்வம்எல்லாம் தானம் செய்த செங்கல்வ ராயனைநாம் மறப்ப துண்டோ? 1 பாடங்கள் உருப்போட்டுப் பட்டம் வாங்கும் படிப்புமட்டும் வாழ்க்கைக்குப் பயன்படாது நாடெங்கும் பரவியுள்ள வறுமை நீங்கி நல்வாழ்வு நாமடைய வேண்டு மானால் வீடெங்கும் தொழிற்கல்வி விளங்க வேண்டும் விஞ்ஞானக் கலைவிரிய வேண்டும் என்றே ஈடெங்கும் இல்லாத எண்ணங் கொண்ட ஈகையே செங்கல்வராயன் ஏற்றம். 2 பார்த்தனுக்குத் தேர்ஓட்டிப்பகவத் கீதை பகர்ந்தபெரும் கண்ணபிரான் பயிலும் தெய்வத் தீர்த்தமெனும் திருவல்லிக் கேணி கோயில் திருமாலின் திருவடியே தினமும் போற்றி ஆர்த்துமனம் ஆலயத்தின் வழிபாட் டிற்கும் அழியாத சாசனத்தால் அறங்கள் நாட்டிப் பேர்த்தும்ஒரு பெரும்பூதூர் உடைய வர்க்கும் பெரியபக்த னாய்வாழ்ந்த பெருமை யுள்ளேன். 3 மெய்யான தெய்வபக்தி இதுதான் என்ன மேதினியில் பிறர்நலமே மிகவும் எண்ணி; பொய்யாமல் தன்னலத்தைப் புறக்கணித்துப் பொதுநலமே நோக்காகப் பொழுதும் வாழ்ந்து செய்யாத புதுமுறையில் தருமம் செய்யச் சேர்ந்திருந்த செல்வமெலாம் தானம் செய்தே எய்யாமல் பெரும்புகழை ஏந்திக் கொண்டான்; என்றென்றும் நம்மிடையே இருப்பதானான். 4 ஆதரிப்பார் இல்லாமல் அனாதையாக அலைந்துகெடும் இளைஞருக்(கு)இங்(கு)அபயம்தந்து |