புலவர் சிவ. கன்னியப்பன் 491

போதனையும் போசனமும் புகட்டிக் காக்கும்
       பொறுப்புள்ள ஆச்சிரமம் பொலியத் தந்தான்;
காதலனை இழந்த இளம் கைம்பெண் யாரும்
       கல்விகற்கப் பொருளுதவி கருணை செய்தான்;
வாதனைசெய் நோய்தீர்க்கும் ஆயுர் வேத
       வைத்தியங்கள் இலவசமாய் வழங்கச்செய்தான்.5

அன்னைதந்தை தெய்வமென ஆராதித்தே
       அறங்களினும் அவர்பெயரை அமைத்து வைத்துச்
சென்னைநகர்க் கீர்த்திஎங்கும் திகழச் செய்த
       செங்கல்வ ராயனுடைச் சிறப்பைப்போற்றும்
பொன்னனைய திருநாள் இபபொன்வி ழாவில்
       பொருள்நலமும் அருள்நலமும் புதுமை பெற்று
மன்னும்இந்த அறநிலையம் மலைபோல் ஓங்க
       மனமார மகிழ்ச்சிபொங்க வாழ்த்துகின்றோம்.

296. அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவாழ்த்து

(பரதநாட்டிய நிபுணர்E.கிருஷ்ணய்யர்அவர்கள்
அறுபதாம் ஆண்டு நிறைவு எய்தியமை குறித்துப்பாடியது)

விடுதலைப்போர் முன்னணியில் நின்றவீரன்
       வீறுதரும் பாரதியின் பாட்டைப் பாடி
சடுதியில்ஓர் பெருங்கூட்டம் கூடச் செய்து
       சத்தியப்போர் சாந்தநெறி சரியாய்ப் பேசி
அடிமைமனம் விட்டொழிய அச்சம் நீங்கி
       அனைவருக்கும் சுதந்தரத்தில் ஆர்வம்பொங்கி
இடியொலிபோல் காந்திமகான் பெயரைக் கூவி
       எழுச்சிகொளச் செய்தவனும் இவனேயாவான்.       1

நிதிநலத்தில் மிகக் குறைவை நினைத்திடாமல்
       நீதிமன்ற வக்கீலாம் தொழிலை நீத்தான்
மதிநலத்தில் யார்என்ன குறைசொன் னாலும்
       மறுபடியும் தொழில்நடத்த மறுத்து விட்டான்;