494நாமக்கல் கவிஞர் பாடல்கள்

298. தமிழ்நாடு வாழ்க!

வீரத்தில் நிறைவான
              தமிழ்நாடு வாழ்க!
       வித்தைக்கும் உறைவான
              தமிழ்நாடு வாழ்க!
சூரத்தின் துணையான
              தமிழ்நாடு வாழ்க,!
       துட்டர்க்குப் பணியாத
              தமிழ்நாடு வாழ்க.       1

வாள்கொண்டு நேர்நின்று
              போர்தந்த போதும்
       வஞ்சங்கள் புரியாத
              தமிழ்நாடு வாழ்க!
கோள்கொண்டு பொய்ச்சொல்லிக்
              குற்றேவல் செய்யாக்
       குணமிக்க சனமிக்க
              தமிழ்நாடு வாழ்க!       2

கொல்லாமை உயர்வுஎன்னும்
              தமிழ்நாடு வாழ்க!
       கொடைவள்ளல் பலர்நின்ற
              தமிழ்நாடு வாழ்க!
இல்லாமை அறியாத
              தமிழ்நாடு வாழ்க!
       இரவாமை அறம்என்னும்
              தமிழ்நாடு வாழ்க!       3

படையாமல் உண்ணாத
              தமிழ்நாடு வாழ்க!
       பகையாரும் எண்ணாத
              தமிழ்நாடு வாழ்க!