498நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மானமிகக் காந்தி செய்யும் தவத்தி னாலே
       இந்நாட்டின் தீண்டாமை மறைந்து போகும்.       3

சத்தியமே கடவுள் என்ற உண்மை கண்ட
       சாந்தநெறி நூல்கள்மிக்க தமிழா! சொல்வாய்
உத்தமராய்த் தமிழ்நாட்டுக் கோயில் எல்லாம்
       உள்ளிருந்து பூசைகொள்ளும் மேலோர் என்னும்
சித்தர்களாம் அறுபத்து மூவர் தம்முள்
       திருமொழியார் பனிரண்டு ஆழ்வார் தம்முள்
எத்தனைபேர் இழிகுலத்தார்! எண்ணிப்பார்க்கின்
       இன்னுமிங்குத் தீண்டாமை இருக்க லாமா?       4

302. காங்கிரஸ் பொன் விழா

கும்மி

தேர்அல்ல கார்த்திகைத் தீபம்அல்ல - அந்தத்
       தீபாவ ளிதானும் இன்றுஅல்லவே
ஊர்எல்லாம் என்ன வெளிச்சம்என் பீர்இந்த
       ஒப்பற்ற கொண்டாட்டம் ஏதுக்கென்பீர்.       1

காங்கிரஸ் என்றுஒரு சங்கமுண்டு - அது
       காதிற் படாதவர் யாருமில்லை
ஈங்கதற்(கு) ஐம்பதாம் ஆண்டுகள் ஆனதால்
       இந்திய மக்களின் கொண்டாட்டம்.       2

தங்கி இருக்க இடம்கொடுத்தோம் - அதைத்
       தங்கள் இடமெனச் செய்துகொண்டார்
இங்(கு)இருந் தேயவர் மெல்லமெல்ல - இந்த
       இந்திய நாட்டை அடிமைகொண்டார்.       3

அந்த அடிமைத் தனம்போக - நம்
       அன்னையும் ஆட்சியும் மீட்சிபெற
இந்தத் தினம்வரை இந்தியர் மானத்தை
       ஏந்தி உழைப்பது காங்கிரசே.       4

கெஞ்சிக்கெஞ் சிப்பல நாள்கேட்டும் - அதைக்
       கேட்பவர் யாரும்இல் லாததனால்