அஞ்சிக்கை யாவையும் விட்டொழிய - நமக்(கு) ஆண்மை கொடுத்தது காங்கிரசே. 5 சத்தியம் என்ற கொடிபிடித்தே - உயிர் சாந்தத் தியாகப் படைதொடுத்தே உத்தமர் காந்தி உரைப்படி காங்கிரஸ் உலகம் வியந்திடும் போர்நடத்தி, 6 அடிமைக் குணத்தை அழித்து விடுதலை ஆனந்தத் தில்நமக்(கு) ஆசை தந்து கொடுமை சகித்திடும் அன்பின் வலிமை கொடுத்ததும் நம்முடைக் காங்கிரசே. 7 ஒளியறி யாத விழிபோலும் - ஓர் ஓசைப்ப டாத செவிபோலும் களியறி யாதநம் அடிமையை மாற்றிக் களிப்புறச் செய்திடும் காங்கிரசே. 8 ‘காங்கிரஸ்‘ என்பது இந்திய நாட்டின் கண்ணியம், கவசம், கேடயமாம். காங்கிரஸ் தன்னை இந்தியர் தம்இரு கண்ணின் மணியெனக் காத்திடுவோம். 9 பொன்முடி சூட்டி வணங்கிடுவோம் - இன்னும் புத்துணர் வோடு பணிபுரிவோம் நன்மைகள் யாவையும் காங்கிர சால்வரும் நாடு செழித்திட நாம் வாழ்வோம். 10 303. தமிழரசுக் கழகத்துக்கு வாழ்த்து (திருத்தணிகை தமிழ்நாட்டவர்க்கு மீண்டபோதுமகிழ்ந்து பாடியது) தமிழர்களின் தனித்தெய்வம் முருகன்கோயில் தலமாகும் திருத்தணியைத் தமிழ்நாட் டார்கள் அமைதிகெட ஆந்திரத்தில் சேர்த்தார் என்ற அநியாயம் அதைஎதிர்த்தே அறப்போர் செய்து நமதுடைமை திருத்தணியை நமக்கே மீட்ட நற்பணியால் பெரும்புகழுக் குரிய ராகும் |