தமிழரசுக் கழகத்துத் தொண்ட ரோடும் தலைவர்சிவ ஞானமவர் தழைத்து வாழ்க. 1 ஓலமிடும் கடலலைசேர் குமரி யோடும் ஒட்டவைத்துத் தமிழ்நாஞ்சில் நாட்டை மீட்டோம். வேலவனின் திருத்தணியை மீட்டோம் இன்னும் வேங்கடவன் திருப்பதியும் மீட்டோம் என்று காலமெல்லாம் முழங்கிவரும் தமிழரசுக் கழகத்தின் விருப்பம்கை கூடு மானால் ஞாலமெல்லாம் வியக்கும்ஒரு வெற்றி காண்போம்; நம்முடைய ஞாயபலம் சிறக்க வாழ்வோம். 2 "அறம்மிகுந்த தமிழ்மொழியின் சிறப்பைப்போற்றி அதுவழங்கும் திருநாட்டின் நலத்தைப் பேணி மறம்கடந்த தமிழினத்தின் மாண்பைக் காத்து மாநிலத்தில் யாவரொடும் மருவி வாழத் திறமளிக்கும் சன்மார்க்கம் திசைதப் பாமல் தீமைகளைத் தியாகத்தால் வெல்வோம்" என்னும் அறஞ்சிறந்த கொள்கைகளே தாங்கி நிற்கும் தமிழரசுக் கழகத்தின் தனிமை வெல்க. 3 304. கன்னித் தமிழ் குமரிமலர் கொண்டு வந்தனள் - பல கொத்துக் கொத்தாய் இன்பம் தந்தனள் அமரநிலை கொண்டு துள்ளுவேன் - அந்த ஆனந்தம் என்னென்று சொல்லுவேன்! 1 பொன்னும் மணியும் குறைந்தனள் - என்ற போதும் அழகு நிறைந்தனள் சின்னஞ் சிறிய சிரிப்பினாள் - என்றன் சிந்தையில் இன்பம் நிரப்பினாள். 2 |