502நாமக்கல் கவிஞர் பாடல்கள்

305. வாழ்க! வாழ்க!

வாழ்க வாழ்க உலகெலாம்
       வாழ்க எங்கள் தேசமும்
வாழ்க எங்கள் தமிழகம்
       வாழ்க எங்கள் மனையறம்
வாழ்க மேழிச் செல்வமே
       வளர்க நாட்டுக் கைத்தொழில்
வாழ்க எங்கள் வாணிபம்
       வாழ்க நல்ல அரசியல்.       1

அன்பு கொண்டு யாவரும்
       அச்சம் இன்றி வாழ்கவே
துன்ப மான அடிமையின்
       துக்கம் யாவும் நீங்கியே
இன்ப மான யாவுமெய்தி
       இந்த நாட்டில் எங்கணும்
தென்பி னோடு தெளிவு பெற்றுத்
       தேவர் போற்ற வாழ்கவே.       2

306. HEALTH IS WEALTH

  Health is Wealth; mere
       Wealth is Filth

Have this, boy! yow enjoy!
Chafe this, boy! then annoy!
Hark it - Mark it take it to heart:
Own it Boon it you are the sort.       1

None but those who care these
Can find ease or that peace
Know it, do it, never too late
Throw it, push it, Life yow hate.       2