சுந்தர கவிகள் பாடும் சொல்வள முடையோன் தாகூர். 2 கருணையின் உருவு காட்டும் கவிரவீந் திரநாத் தாகூர் அருணனாய் உலகுக் கெல்லாம் அறிவொளி பரப்பி வாழ்ந்தான் மருணெறி மாற்ற இந்த மாநில மக்கட் கெல்லாம் பொருணெறி சாந்தி சொல்லும் புத்தக மாக நிற்பான். 3 அரசியல் போராட் டத்தில் ஆழ்ந்திலன் என்றிட் டாலும் புரைசெயும் அடிமை வாழ்வின் புண்ணையே எண்ணி எண்ணிக் கரைசெய முடிந்தி டாத கவலையால் கண்ணீர் பொங்க உரைசொலி அடிமைக் கட்டை உடைத்திடத் துடித்தோன் தாகூர். 4 ‘ஒத்துழை யாமை‘ என்று காந்தியார் உரைக்கும் முன்னால் இத்துரைத் தனத்தார் தம்மோ டிணங்கிடப் பிணக்கி விட்டோன். பற்றுகள் அவர்முன் தந்த பட்டமும் பரிசும் வீசித் சுத்தியை முதலிற் செய்த சுதந்தர தீரன் தாகூர். 5 காந்தியும் ‘குருதேவ்‘ என்று கைகுவித் திறைஞ்சும் தாகூர் மாந்தருள் பலநாட் டாரும் மதங்களும் மருவி வாழ்ந்து |