புலவர் சிவ. கன்னியப்பன் 91

தேர்ந்த நல்லறிவை அன்பைச்
       செகமெலாம் பரப்ப வென்றே
‘சாந்திநிகேதன்‘ என்ற
       சமரச சங்கம் தந்தோன்.       6

கலைகளின் வழியே தெய்வக்
       கருணையைக் காண்ப தென்னும்
நிலையினைப் படிக்க வென்றும்
       நிறுவிய நிலையம் ஈதாம்
சிலைதரல் ஆடல் பாடல்
       சித்திரம் நடிப்ப ரங்கம்
பலவித வித்தை எல்லாம்
       பயிலுதற் கிடமாய் நிற்கும்.       7

தாய்மொழிப் பற்றும் தங்கள்
       கலைகளைத் தாங்கி நிற்கும்
ஆய்மையும் வங்கா ளிக்கே
       அதிகமாம்; அதனால் எல்லாச்
சீமையும் தாகூர்ப் பாட்டைச்
       சிறப்புறப் பரப்பி னார்கள்;
வாய்மையைத் தமிழர் போற்றி
       வளர்ப்பரோ தமிழின் மாண்பை?       8

குறிப்புரை:-சீமை - தேசம் (8); வித்தை - தந்திரத் தொழில்;
மாசாலம்; போற்றி -வணங்கி.

48. தேசிக விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
       தினமும் கேட்பதென்றன் செவிப்பெருமை;
ஆசிய ஜோதியெனும் புத்தர்போதம்
       அழகுத் தமிழில்சொன்னான் அதுபோதும்       1

கோழி குலவிவரும்; கிளிகொஞ்சும்;
       குழந்தை எழுந்துதுள்ளிக் களிமிஞ்சும்;