வருகவே சத்தியமூர்த்தி! வாழ்கஉன் இனத்தோ ரெல்லாம் பெருகிநம் சாந்தி சேனை பெற்றதாய் நாட்டை மீட்கும் அருகிலே அடையும் சொந்த அரசினை அழைத்துக் கொள்ளத் தருகஉன் திறமைமுற்றும் தமிழகம் பெருமை கொள்ளும். 8 குறிப்புரை:-துயரம் - துன்பம், வறுமை; தஞ்சம் - அடைக்கலம்; பஞ்சம் - வறுமை; பிணி- நோய். 60. யோக சமாஜ குரு பள்ளியில் மாணவனாய்ப் படிக்கும் போதே பரமார்ந்த சிந்தனைகள் பற்றிக் கொள்ளத் துள்ளிவரும் வாலிபத்தின் துடிப்ப டக்கித் துறவறமே மேற்கொள்ளத் துணிவு கொண்டோன் தள்ளரிய ஆசைகளைத் தணிப்ப தற்காயித் தமோராஜத்தாம் உணவுகளைத் தளைக் கற்றோன் உள்ளமதை ஒருநிலையில் ஒடுங்கச் செய்ய உப்பின்றி உண்டவனாம் சுத்தா னந்தன். 1 தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான் திசைமொழியாம் ஆங்கிலத்தில் திறமை மிக்கான் மென்மைமிகும் பிரெஞ்சுமொழி விரும்பிக் கொண்டான் மேதினியில் இலக்கியத்தின் மேன்மை யுள்ள பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தா னந்த பாரதியார் மெய்ஞ்ஞானப் பண்பில் மிக்க தன்மொழியே தலைசிறந்த மொழியா மென்று தமிழுக்கே பணிபுரியும் தவசி யானான். 2 கானகத்தே மறைந்துவிடத் துறந்தா னல்லன் கண்மூடிக் கருத்தடக்கும் மௌனி யல்லன் ஞானமொழி மக்களுக்கு நாளும் சொல்லி, நாட்டிற்குச் சேவை செய்யும் நாட்டம் ஒன்றே ஊனெடுத்த பயன்என்னும் உறுதி கொண்டான் ஓயாமல் உழைத்துவரும் சுத்தா னந்தன் |