புலவர் சிவ. கன்னியப்பன் 119

பழுதிலா வாழ்க்கை தந்த
       பயமிலா நெஞ்சத் தாலே
எழுபது வயதின் மேலே
       இன்னமும் இளைஞ னேபோல்
எழுதரும் மேலோன் காந்தி
       இடையறாப் பக்த னாக
வழுவிலா அரசு காட்டும்
       ராஜாஜி வாழ்க வாழ்க!       6

62. காமராஜர் வாழ்க

ஒருவருக்கும் பொல்லாங்கு நினையா நெஞ்சன்
       உரிமையுள்ள யாவருக்கும் உதவும் பண்பன்
அருவருக்கும் வாதுகளில் அலையாச் சொல்லன்
       அமைதியுடன் பணிபுரியும் அன்புத் தொண்டன்
திருவிருக்கும் காந்திமகான் கொள்கை தாங்கும்-
       தேசபக்தன் உழைப்பதனால் உயர்ந்த செம்மல்
மறுவிருக்கும் ஆசைகளால் மனம்கெ டாத
       முதலமைச்சர் காமராஜர் மகிழ்ந்து வாழ்க.

63. ஜவஹர்லால் மன்னன்

மன்னுயிரைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தி
       மலைமலையாய்ப் பிணக்குவியல் குவித்த தாலே
மன்னரெனப் பலர்வணங்கத் தருக்கி வாழ்ந்தோர்
       மாநிலத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம்;
தன்னுயிரை மன்னுயிர்காத் தத்தம் செய்து
       தருமநெறி தவறாத தன்மைக் காக
இன்னுயிர்கள் மணங்குளிர் இளங்கோ என்றே
       எதிர்கொள்ளும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.       1

பணம்படைத்த சிலபேர்கள் தனியே கூடிப்
       பட்டாளம் சுற்றிநின்று பாரா செய்ய
மணம்படைத்தாம் வரவளிக்க மகிழ்ந்து போகும்
       மன்னரென்பார் எத்தனையோ பேர்கள் உண்டு;