பிஞ்சில் வெம்பிய காய்கறி யென்றும் பெரிதாய்ச் செழித்ததைக் கண்டதுண்டோ? அஞ்சில் கெட்டது ஐம்பது வயதிலும் அழியா திருப்பினும் செழியாது. (கொஞ்)2தாயும் தந்தையும் தவறுசெய் தாவது தனையரைச் சேர்வது பொய்யாமோ? சேயைச் சிசுவினில் கவனிக் காவிடில் சென்மத் தால்வரும் நன்மையுண்டோ? (கொஞ்)3 கருவில் வளர்ப்பார் கடவுள்; பூமியைக் கண்டபின் வளர்ப்பது நாமன்றோ? அறிவின் நாமதை அறிந்தே வளர்ந்திடில் ஆயுள் நீண்டிடும் நோயுமில்லை. (கொஞ்)4 விதியாற் சாவதும் இருந்தா லும்பலர் வீணாய்ச் சாவதும் உண்டென்றும் மதியால் நாமதை மாற்றிட லாமென்ற மாமுனி யவர்மொழி இகழாதே. (கொஞ்)5 76. சுகாதாரக் கும்மி கும்மி யடிபெண்ணே கும்மிய டிகுல தெய்வத்தைக் கும்பிட்டுக் கும்மியடி நம்முடைத் தேசத்தில் நோய்களில் லாமலே நாடு செழித்திட வேணுமென்று. 1 செத்தவர் தம்மை எழுப்பித் தரவல்ல சித்த ரிருந்த திருநாட்டில் எத்தனை யெத்தனை நோய்களினால் மக்கள் ஈசலைப் போல மடிவதென்ன! 2 ஈசனளித்த அறிவிருந் தும்நல்ல இயற்கை விதிகளை விட்டுவிட்டு |